உயிர் பிம்பம் ஆனாயோ லிங்க்

உயிர் பிம்பம் ஆனாயோ லிங்க்

ஹாய் டியர்ஸ்!

அமேசான் கிண்டில் நேரடி புக்"உயிர் பிம்பம் ஆனாயோ"போட்டிருக்கேன்.

படிச்சுட்டு உங்கக் கருத்தைச் சொல்லுங்க டியர்ஸ்.

@@@@@@@@

டீசர்....

அன்னத்திடமும் ராதாவிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் பின்னாடியே வந்த ராகவி அவனது வண்டிக்கு அருகில் வந்து நின்றாள்.

அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினதும் “ஹலோ கண்ணன் என்ன இது?ஒருத்தி இங்க இருக்காளேன்னு சொல்லிட்டுப் போகத் தோணலையா?”

அந்தக் கண்ணன் என்ற அழைப்பில் மொத்தமாக அதிர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவனது கண்களில் தெரிந்தக் காதலில் அப்படியே அவளைத் தூக்கி கட்டிக்கொண்டு முத்தமிட்டுவிடலாமா?என்கின்ற ஏக்கம் அவனுக்கு வந்திருந்தது.

அதைப்பார்த்தவள் தனது புருவம் உயர்த்தி “என்ன கண்ணன்?மனசுக்குள்ள என்ன ஓடிட்டிருக்கு?இப்படியே இவளைத் தூக்கிட்டுப் போயிடலாமான்னா?உங்களால் முடிஞ்சா இப்போ ஒரே ஒரு வாய்ப்புத் தர்றேன் தூக்கிட்டுப் போங்க?இல்லைன்னா இனி வாய்ப்பு தரபடமாட்டாது”

அதைக்கேட்டவன் “இப்போது நான் நினைத்தாலும் உன்னைத் தூக்கிட்டுப் போகமுடியாது அப்படிங்கிற தைரியத்துலதானே இப்போ இப்படி வந்துச் சொல்லுற?”

“ஏன்?”

“ஏன்னா?நீ சின்னபிள்ள?”

“சின்னபிள்ளையா?அப்போ அந்தப்பிள்ளையை நீங்க நேசிக்கமட்டும்தான் முடியும்.கல்யாணம் பண்ணிக்க முடியாது அப்படித்தானே!அப்புறம் எதுக்கு இந்த வீரப்பா கோவிச்சிட்டு பேசாம போறீங்களாம்?”

“அதுக்கான காரணம் தெரிஞ்சும் கேட்கிறியே?”

“அதே காரணம்தான் நான் பேசுனதுக்கும்.இன்னும் கோபம் போகாமல் இருந்தால் எப்படி?”

“அறிவும் ஆசையும் எதிரெதிர் திசையில் போகுது.அது இழுத்துப் பிடிக்க முடியல.எங்கே கையைமீறி போயிடுமோன்னு தோணுது”என்று குரல் கரகரக்கச் சொன்னவனின் கையை சட்டென்றுப் பிடித்தவள் அவனருகில் நெருங்கி நின்றுவிட்டாள்.

அவளுக்குமே அவனது குரலின் மாறுதல் உள்ளத்தை உடைக்க அப்படியே நொறுங்கிவிட்டாள்.

அவனது உள்ளமோ இருக்கின்ற தடைகளை உடைத்து அவளைத் தன்னவளாக்கிவிடவேண்டும் என்ற வேகம் வரவும் சட்டென்று தன்னருகில் இழுத்தவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டான்.

நல்லவேளையாக அவனது பைக் வீட்டின் காம்பவுண்டிற்குள் நின்றிருந்ததால் யாரும் பார்க்கவில்லை.வீட்டிற்குள்ளிருந்த அன்னமும் ராதாவும் பின்னபக்கமாக வேலையில் இருந்தனர்.

அந்த ஒற்றை முத்தத்தில் இருவரின் இதயமும் உயிர்பெற்றது.

கண்கள் இரண்டும் காதல்கவிதைப் பேசியது.அவனது கையில் இருந்து மெதுவாக விலகிய ராகவி”மிஸ்டர் கண்ணன் இன்றையிலிருந்து நீங்க என் சொத்து.எவளுக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.முடிஞ்சா என்கிட்ட இருந்து தப்பிக்கப்பாருங்க”

“தப்பிக்க விருப்பமில்லையே! விரும்பி உன்கிட்ட மாட்டிக்கதான் ஆசை.ஆனால் ஆனால் அது உன்னையும் என்னையும் பாதிக்குமே.வேண்டாம் உன் மனதிலும் தவறான எண்ணத்தை விதைத்து விட்டேன் மன்னிச்சுக்க”

அவனது சட்டையைப் பிடித்தவள் “நான்பாட்டுக்கு ஒதுங்கித்தானே போனேன்.இழுத்துப்பிடித்து முத்தம் தந்துட்டு இப்படி விலகிப்போனா எப்படி?”

https://www.amazon.com/dp/B0D1GVTKLK

https://www.amazon.in/dp/B0D1GVTKLK